பூங்கா கழகம்: செம்பவாங் பூங்காவில் விழுந்த மரங்கள் ஆரோக்கிய நிலையில் இருந்தன

2 mins read
c0879f0e-cb96-48f7-9cc8-a4a086c4fae5
-

செம்பவாங் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை விழுந்து 14 பேரைக் காயப்படுத்திய இரண்டு மரங்கள் கடந்த ஆண்டு மே மாதத்தில் சோதிக்கப்பட்டன என்றும் அவை ஆரோக்கியமான நிலையில் இருந்தன என்றும் தேசிய பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது. வேரோடு சாய்ந்த அந்த இரு மரங்களின் பெரிய அளவு, மரம் விழுந்த திசை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில். அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக அந்த மரங்கள் விழுந் திருக்கக்கூடும் என்று கூறினார் கழகத்தின் பூங்காக்கள் குழுமத் தின் இயக்குநர் திரு சுவா ஹோக் சியோங். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இடியோடும் பலத்த காற்றோடும் பெய்த மழையில் முதிர்ச்சியான இரு மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அவற்றில் 21 அடி உயரம் கொண்ட ஒரு மரம் அங்கிருந்த ஒதுங்கு கூடாரத்தின் மீது சாய்ந் ததில் அங்கு கிறிஸ்மஸ் ஒன்று கூடலில் பங்கேற்ற எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் 14 பேர் காயமடைந் தனர். அந்தக் கூடாரத்தில் 17 பேர் மழைக்காக ஒதுங்கினர். கூடாரத் தின் மீது மரம் விழுந்ததில் காயம் பட்ட 14 பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேற்றிரவு நிலவரப்படி, அவர்க ளில் பெரும்பாலோர் சிறு காயங் களுக்கு வெளிநோயாளி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கூடாரத்தின் மீது விழுந்த மரத்தின் பெயர் 'எரித்ரோஃபிலியம் சுவாவியோலென்ஸ்'. அதைப் பொதுவாக 'ஒர்டியல்' மரம் என்று அழைப்பார்கள். அதன் சுற்றளவு 3.1 மீட்டர்.

விழுந்து கிடந்த மரங்ளையும் சேதமுற்ற ஒதுங்குக் கூடாரத்தையும் நேற்று ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்