சிங்கப்பூர் தூதரகம்: கடல் எல்லை தொடர்பிலான மலேசிய ஊடகச் செய்தி துல்லியமற்றது

சிங்கப்பூர் தூதரகம்: கடல் எல்லை தொடர்பிலான மலேசிய ஊடகச் செய்தி துல்லியமற்றது

1 mins read

ஜோகூர் துறைமுக எல்லை தொடர்பான மலேசிய ஊடகச் செய்திகள் துல்லியமற்றவை என்று சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 15, 16 தேதிகளில் MalayMail.com இணையத் தளத்தில் இதன் தொடர்பில் வெளியான செய்திக ளைக் குறிப்பிட்டு தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் உள்கட்டமைப்புக் கான ஒருங்கிணைப்பு அமைச் சரும் போக்குவரத்து அமைச்சரு மான கோ பூன் வான் இம்மாதம் ஆறாம் தேதி, "அண்மையில் ஜோகூர் பாரு துறைமுக எல்லை என மலேசிய அரசு குறிப்பிட்ட விரிவுபடுத்தப்பட்ட எல்லையானது 1979ஆம் ஆண்டில் அது தனது எல்லை என்று குறிப்பிட்டதையும் தாண்டி சிங்கப்பூரின் எல்லைக் குட்பட்ட பகுதியையும் சேர்த் துள்ளது. கடந்த 1979ல் மலேசியா தாமாகத் தயாரித்து வெளியிட்ட மலேசிய வரைபடத்தை சிங்கப்பூர் அங்கீகரிக்கவில்லை. அந்தச் சமயத்தில் சிங்கப்பூர் துவாஸ் பகுதியில் நிலமீட்பு நடவடிக்கை எதையும் செய்திருக்கவில்லை," என்றார்.

இரு வாரங்களுக்கு முன்பாக எழுந்துள்ள எல்லை சர்ச்சை அமைதியான, நிபுணத் துவமான முறையில் தீர்க்கப்படும் என நம்புவதாக திரு கோ பூன் வான் குறிப்பிட்டார். "தற்போது ஜோகூர் பாரு துறைமுக எல்லை என்று கூறப்படும் விரிவுபடுத் தப்பட்ட பகுதியை இவ்வாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்கு முன்புவரை மலேசியா தன்னுடையது என்று குறிப்பிட்ட தில்லை. சிங்கப்பூர் அந்தக் கடல்பகுதியைக் கண்காணித்து வந்ததை மலேசியா எதிர்க்கவு மில்லை," என்று தூதரகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.