தோ பாயோவிலிருந்து பொத்தோங் பாசிருக்குச் செல்லும் புதிய குறுந்தொலைவு பேருந்துச் சேவை ஒன்று நாளை மறுநாளிலிருந்து செயல்படவுள்ளது. வாரநாட்களின் காலை உச்ச நேரங்களில் 142A எனும் இச்சேவை செயல்படும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் உட்சுற்றுப் பேருந்தான சேவை எண் 142ன் தடத்தில் இந்தப் புதிய பேருந்துச் சேவையும் இயங்கும். தோ பாயோ பேருந்து முனையத்தில் இருந்து பொத்தோங் பாசிர் அவென்யூ 1க்கு பேருந்துச் சேவை எண் 142 செல்கிறது. வார நாட்களில் காலை 6.28 மணி, 6.44 மணி ஆகிய நேரங்களில் 142A சேவையின் முதல் இரண்டு பேருந்துகள் தோ பாயோ பேருந்து முனையத்திலிருந்து தொடங்கும். நாளின் கடைசி இரண்டு பேருந்துச் சேவைகள் அப்பர் சிரங்கூன் ரோட்டில் இருக்கும் 18, உட்ஸ்வில் கொண்டோமினியத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து முறையே காலை 7.22 மணி, 7.49 மணி ஆகிய நேரங்களில் தொடங்கும்.
தோ பாயோவிலிருந்து பொத்தோங் பாசிருக்கு புதிய பேருந்துச்சேவை
1 mins read

