வாகனங்களுக்கு புதிய புகை சோதனை

வாகனங்களுக்கு புதிய புகை சோதனை

1 mins read

நடைமுறை வாழ்க்கைச் சூழலில் உமிழப்படும் பசுமை வாயுக்களின் அளவைக் காட்டும் மேம்பட்ட புதிய வாகனப் புகைச் சோதனைத் தரத்தை அடுத்த மாதத்திலிருந்து ஏற்றுக்கொள்ள இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. புதிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க, ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட 'டபுள்யூஎல்டிபி' எனும் சோதனையிலிருந்து பெறப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்வதுடன் ஜனவரி முதல் தேதியிலிருந்து வாகன புகை உமிழ்வுத் திட்டத்தின்கீழ் வாயு வெளியீட்டு அறிக்கையைப் பயன்படுத்தும். இதன் மூலம் சிங்கப்பூரில் காற்றின் தரம், பொதுச் சுகாதாரம் ஆகியன மேம்படுத்தப்படும் எனவும் பழைய என்இடிசி, ஜப்பானிய வண்டி ஓட்டும் சுழற்சி ஆகியனவும் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாரியம் குறிப்பிட்டது.