தொலைக்காட்சி ஒளிபரப்பு அடுத்த மாதம் இரண்டாம் தேதியில் இருந்து மின்னிலக்கமாக மாறினாலும் 'அனலாக்' எனப்படும் ஒத்திசைத் தொலைக்காட்சியில் மின்னிலக்க ஒளிபரப்பைப் பார்ப்ப தற்குத் தேவைப்படும் இணைப்புப் பெட்டியை வழங்கும் காலக் கெடுவை மேலும் மூன்று மாதங் களுக்கு அரசாங்கம் நீட்டித்து உள்ளது. மின்னிலக்கத் தொலைக்காட்சி இணைப்புப் பெட்டிக்கான விண்ணப்பத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நேற்று தெரிவித்தது. கட்டணம் செலுத்தி தொலைக் காட்சி சந்தாதாரராக இல்லாத அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் அரசாங்கத்திட மிருந்து இந்த இணைப்புப் பெட்டியைப் பெறத் தகுதிபெறும். தகுதிபெறும் வீடுகள் இணைப் புப் பெட்டி பொட்டலத்தைப் பெறு வதுடன் அவற்றை இலவசமாக வீட்டில் பொருத்திக்கொள்ளவும் முடியும்.
பெஸ்ட் டெங்கி, கோர்ட்ஸ், கெய்ன் சிட்டி, ஹார்வி நோர்மென் ஆகிய கடைகளிலிருந்து உணர் கருவிகள், இணைப்புப் பெட்டி போன்றவற்றையோ அல்லது ஒரு மின்னிலக்கத் தொலைக்காட்சி யையோ வாங்குவதற்காக இந்த உதவித் திட்டம் ஆதரவு அளிக்கிறது.

