'சிங்கப்பூரை கௌரவித்தது ஐநா' சமரசத்திலிருந்து பெறப்படும்

'சிங்கப்பூரை கௌரவித்தது ஐநா' சமரசத்திலிருந்து பெறப்படும்

1 mins read

அனைத்துலகத் தீர்வுகளுக்கான ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கவும் அதற்கு சிங்கப்பூரின் பெயரைச் சூட்டவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 'சமரசத்துக்கான சிங்கப்பூரின் உடன்படிக்கை' என்று அறியப் படும் இது, ஐக்கிய நாடுகளின் ஆதரவில் சிங்கப்பூரின் பெயரை இணைத்து பெயரிடப்படும் முதல் ஒப்பந்தம் என்று சட்ட அமைச்சர் கா. சண்முகம் நேற்று வெளியிட்ட ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தின் முதல் கையொப் பதாரர்களில் சிங்கப்பூரும் இருக்கும் என எதிர்பார்ப்பதாக சட்ட அமைச்சு தெரிவித்தது. "சமரசம் மூலம் எட்டப்பட்ட தீர்வுக்கான ஒப்பந்தங்களை எல்லைதாண்டி செயல்படுத்த இந்த உடன்படிக்கை வகை செய்யும். சமரசத்தின் வழியாகத் தீர்வு காணப்படும் ஒப்பந்தங்கள் எல்லைதாண்டிய வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்க நம்பத்தகுந்தவையாக இருப்பதால் வர்த்தகங்களில் நம்பகத்தன்மை அளிக்கும்," என்றது அந்த அறிக்கை.