நச்சுணவு சம்பவங்களுக்கு தண்டனை கடுமையாகிறது

நச்சுணவு சம்பவங்களுக்கு தண்டனை கடுமையாகிறது

1 mins read

உணவு நஞ்சாக மாறி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட உணவகங்கள், உணவு விநியோகிப்பாளர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுச் சுகாதாரத் தர விதிமீறல் களுக்கான அபராதத் தொகையை தேசிய சுற்றுப்புற வாரியமும் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணை யமும் அதிகரிக்க உள்ளன. குற்றம் இழைக்கும் உணவக உரிமையாளர் களும் உணவு விநியோக நிறுவன நடத்துநர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் கடுமையானதாக இருக் கும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த இரு அமைப்புகளும் நீதிமன்றத்தை வலியுறுத்தும்.

இப்போது, முதன்முறை குற்றம் இழைப்போருக்கு சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டத்தின்கீழ் $10,000 வரை அபராதமும் மறுபடியும் குற்றமிழைப்போருக்கு $20,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படுகிறது. பொதுச் சுகாதாரத்தைப் பாது காத்து, சிங்கப்பூர் உணவுப் பாது காப்புத் தரத்தை வலுப்படுத்தும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று அவ்விரு அமைப்புகளும் கூட்டறிக்கை மூலம் நேற்று தெரி வித்தன. கடந்த நவம்பரிலும் இம்மாதத்தி லும் நான்கு பெரிய நச்சுணவு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் இடம்பெறு கின்றன.