குழாய்த் தண்ணீரில் புழுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில் அங் மோ கியோவில் இல்லப் பணிப்பெண் ஒருவர், குழந்தை யின் போத்தலைக் குழாய் நீரில் கழு வியபோது அதனுடன் ஒரு புழுவும் வந்ததாகக் கூறி, அந்தப் படத்தையும் வெளியிட்டிருந்தார். அதற்குச் சில வாரங்களுக்குமுன் தமது வீட்டின் கழிவறைத் தொட்டியில் ஒரு புழு இருந்ததைக் குடியிருப்பாளர் ஒருவர் கண்டதாக 'ஷின்மின்' சீன நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் சம்பவங்களை அடுத்து, பொதுப் பயனீட்டுக் கழகம் கருத் துரைத்துள்ளது.
கடுமையான, பல அடுக்கு நீர்ச் சுத்திகரிப்பு முறையைத் தான் கொண் டுள்ளதாக ஃபேஸ்புக் பக்கத்தில் கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன், விரிவான தண்ணீர்த் தரக் கண்காணிப்புத் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல, தூய குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்து வருவதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது. உயரழுத்தக் குழாய்களின் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகக் கழகம் கூறியது. உயர்மாடிக் கட்ட டங்கள் எனில், நீரேற்றுச் சாதனங் களின் மூலம் அங்குள்ள நீர்த் தொட்டி களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது என்றும் அந்தத் தொட்டிகள் முழுமை யாக மூடப்பட்டு, பூட்டுப் போடப்பட்டு இருப்பதாகவும் கழகம் தெரிவித்து உள்ளது.

