ஆப்பிள், கூகல் ஊழியர்கள் போல நடித்து $15,000மோசடி

ஆப்பிள், கூகல் நிறுவன ஊழியர் கள் எனக் கூறிக்கொண்ட மோசடி அழைப்பாளர்களிடம் ஒரே வாரத்தில் குறைந்தது $15,700 பணத்தைச் சிலர் பறி கொடுத்துள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை குறைந்தது எட்டு ஆள்மாறாட்ட மோசடிப் புகார்கள் வந்துள்ளதாக போலிஸ் நேற்று தெரிவித்தது. 'கூகல் பிளே', 'ஆப்பிள் ஐடியூன்' அன்பளிப்பு அட்டை களை விற்று வரும் சில்லறை வர்த்தகர்களே மோசடிக்காரர் களின் இலக்காக இருந்துள்ள னர். 'கூகல் பிளே' அல்லது 'ஆப்பிள் ஐடியூன்' ஊழியர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத் திக்கொண்டு சில்லறை விற்ப னைக் கடைகளின் ஊழியர்களி டம் அவர்கள் பேசியுள்ளனர். தாங்கள் வாங்கிய 'கூகல் பிளே', 'ஆப்பிள் ஐடியூன்' அன்ப ளிப்பு அட்டைக்குரிய தொகைக் கான மதிப்பைத் தங்களால் பயன்படுத்த இயலவில்லை எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக அந்த மோசடி அழைப்பாளர்கள், கடை ஊழியர் களிடம் கூறுவர்.

அந்தப் புகார்கள் குறித்து தாங்கள் விசாரித்து வருவதாகக் கூறும் அந்த மோசடிக்காரர்கள், அந்த அன்பளிப்பு அட்டைகள் செல்லத்தக்கதா என்பதைச் சோதிப்பதற்காக அவற்றின் 'ஆக்டிவேஷன்' எண்களையும் கேட்பர். அதை ஏற்று, கடை ஊழியர் களும் பல அட்டைகளின் எண் களைக் கொடுத்துவிடுவர். எண் களைப் பெற்றுக்கொண்டதும் தங்களது கண்டுபிடிப்புகள் குறித்து தலைமை அலுவலகத் திற்குத் தெரிவித்து விட்டு பின் னர் அந்தக் கடை ஊழியர்களைத் தொடர்புகொள்வதாக அந்த மோசடி அழைப்பாளர்கள் கூறி விடுவர். ஆனால், அவர்கள் சொன்னதுபோல அதன்பின் எந்த ஓர் அழைப்பும் கடை ஊழியர்களுக்கு வராது. இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டவற்றுள் '7-லெ வன்' குழுமமும் அடங்கும் என அறியப்படுவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது. இப்படி அடையாளம் தெரியாத வர்களிடம் இருந்து வேண்டா அழைப்புகள் வந்தால், அவர்கள் தங்கள் கடைகளுக்கு சரக்கு விநியோகிப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டாலும், எச்சரிக்கை யாக இருக்கும்படி சில்லறை வர்த்தகர்களுக்கு போலிஸ் அறி வுறுத்தி உள்ளது. படம்: அமேசாஒ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!