சிங்கப்பூரில் விற்கப்படும் பேபி பவுடரில் அஸ்பெஸ்டாஸ் இல்லை

சிங்கப்பூரில் விற்கப்படும் பேபி பவுடரில் அஸ்பெஸ்டாஸ் இல்லை

1 mins read
b617f7aa-29a9-4980-b86a-238dd0dcf33a
-

சிங்கப்பூரில் விற்கப்படும் ஜான்சன்ஸ் அண்ட் ஜான்சன்ஸ் மற்றும் இதர பேபி பவுடரில் 'அஸ் பெஸ்டாஸ்' எனும் புற்று நோயை உருவாக்கும் பொருள் இல்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் உறுதிப்படுத்தியுள் ளது. இங்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரால் பாதிப்பு ஏற்பட்டு யாரும் புகார் செய்யவில்லை என்று ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அமெரிக்காவில் இதன் தொடர்பில் ஜான்சன்ஸ் அண்ட் ஜான்சன்ஸ் நிறுவனத்துக்கு எதி ராக ஆயிரக்கணக்கான வழக் குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பொருட்கள் தொடர்பான விதிமுறையின்படி, அழகுப் பொருட்களில் அஸ்பெஸ் டோஸ் இருக்கக்கூடாது. சிங்கப்பூரில் அழகுப் பொருட் கள் சோதனை மற்றும் மதிப்பீட்டு உட்படுத்தப்படாது என்றாலும் பேபி பவுடரில் தடை செய்யப்பட்ட எவ்வித பொருளும் இல்லை என் பதை சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியது.