பூன் லேயில் கலவரம்; நால்வர் கைது

பூன் லேயில் கலவரம்; நால்வர் கைது

1 mins read

பூன் லே பிளேஸ், புளோக் 221Aல் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில் 20 பேர் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதில் நான்கு இளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது. அதில் காயமடைந்த 21 வயது ஆடவர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் மேலும் சிலர் கைது செய்யப்பட லாம் என்றும் போலிஸ் கூறியது.