குற்றவாளி-குடும்ப இணைப்புத் திட்டம்; சிறாருக்குச் சிறையிலிருந்து வரும் கடிதம்

குற்றவாளி-குடும்ப இணைப்புத் திட்டம்; சிறாருக்குச் சிறையிலிருந்து வரும் கடிதம்

1 mins read
f322e5d5-e3a3-4979-8930-255a7fed163e
-

சிறைக்கைதிகளையும் அவர்களு டைய குடும்பத்தாரையும் இணைப் பதற்கான ஒரு செயல்திட்டத்தின் மூலம் பெற்றோரிடமிருந்து சிறார் கள் கடிதங்களைப் பெறுகிறார்கள். இப்போது சிறையில் இருக்கும் பெற்றோர்களிடமிருந்து சுமார் 400 சிறார்களுக்கு $50 மதிப்புள்ள அன்பளிப்புகளுடன் கடிதங்கள் கிடைக்கவிருக்கின்றன. இந்தச் சிறார்களுக்கு வயது ஆறு முதல் 12 வரை. கடிதத்துடன் வரும் அன்பளிப் புக்கு மஞ்சள் நாடா நிதி அமைப்பு பொறுப்பாதரவு வழங்குகிறது. 'மீண்டும் பள்ளிக்கு' என்ற புதிய ஒரு செயல்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் பகுதியாக இந்தச் சிறார்களுக்குப் புத்தகப் பை, பற்றுச்சீட்டுகள், நோட்டு, பென்சில் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.

இத்தகைய பிள்ளைகள் தங் கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வரைத் திடீரென பிரிந்துவிடுவ தால் இவர்களுக்குச் சமூக நிலை யிலும் மனரீதியிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகையால் அவற்றுக் குத் தீர்வுகாண வேண்டியது முக் கியம் என்று சிங்கப்பூர் சிறைச் சாலைத் துறையின் மறுவாழ்வு, ஒருங்கிணைப்புப் பிரிவின் சூப் ரின்டெண்டன்ட் வெலிரி சியாங் கூறினார்.

நேற்றைய நிகழ்வில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் (இடது) உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் (இடமிருந்து 2வது) ஒரு குடும்பத்துடன் உரையாடுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்