ஒரு கனரக வாகனத்தின் ஓட்டு நரை இரு குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் தாக்குவதாகக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவி வரு கிறது. அந்த இரு அதிகாரிகள் மீதும் போலிஸ் விசாரணை தொடங்கப் பட்டிருப்பதால் அவர்கள் தற்காலிக மாக தங்கள் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளியில் வெளிர் மேலாடை களை அணிந்துள்ள இருவர், சாலைக்கு அருகே தரையில் அமர்ந்துள்ள ஆடவர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள் ளன. காணொளியின் தொடக்கத் தில் வெளிர் மேலாடை அணிந்தி ருந்தவர்களில் ஒருவர், தரையில் அமர்ந்திருந்தவரின் அருகில் அடிப்பது போல சென்றதையும், அதன் பிறகு தரையில் அமர்ந்தி ருந்தவர் பக்கவாட்டில் விழுந்த தையும் காண முடிந்தது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு நடந்த இச்சம்வபம் பற்றி தான் அறிந்திருந்ததாக ஆணை யம் தெரிவித்தது.
"அந்தச் சமயத்தில் உட் லண்ட்ஸ் சாலைச் சந்திப்பில் அந்த இரு அதிகாரிகளும் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்தனர். "அப்போது அந்த வழியாக உட்லண்ட்ஸ் சோதனைச் சாவ டியை நோக்கிச் செல்லும் கனரக வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தின் ஓட்டுநர் அதிகாரி களின் விதிமுறைகளை மீறி, சாலையின் மூன்று தடங்களைக் குறுக்கே கடந்து ஆக வலது தடத்தில், வாகனத்தை தாறுமாறாக அவர்களை நோக்கி ஓட்டி வந் தார்," என்று ஆணையம் விவரித் தது. அந்த வாகன ஒட்டுநரின் செயல் தனது அதிகாரிகளின் உயிருக்கு மட்டுமல்லாமல் சாலை யைப் பயன்படுத்தும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக் கக்கூடியது என்றும் ஆணையம் சொன்னது.
சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளியில் வெளிர் மேலாடைகளை அணிந்துள்ள இருவர், சாலைக்கு அருகே தரையில் அமர்ந்துள்ள ஆடவர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. படங்கள்: ஃபேஸ்புக்/ஆல் சிங்கப்பூர் ஸ்டஃப்

