முறைகேடான நடத்தையில் ஈடுபடும் பாதுகாவல் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை

முறைகேடான நடத்தையில் ஈடுபடும் பாதுகாவல் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை

1 mins read
f7014cc7-0938-4746-b900-90846bffb2e1
-

மது அருந்திவிட்டு வேலைக்கு வருவது, வேலை நேரத்தில் தூங்கு வது, கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யாமல் தட்டிக்கழிப் பது இவற்றைச் செய்யும் தனியார் துறை பாதுகாவல் அதிகாரி களுக்கு விதிக்கப்படும் தண்டனை அடுத்த ஆண்டு முதல் கடுமை யாக்கப் படலாம். சிங்கப்பூரில் பாதுகாப்பை மேம் படுத்தவும் பாதுகாவல் துறையில் நிபுணத்துவத்தை உயர்த்தவும் போலிஸ் எடுத்துவரும் முயற்சி களில் ஒரு பகுதியாக, முறைகேடா ன நடத்தையை வெளிப்படுத்தும் பாதுகாவல் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை கடுமையா க்கப்படக்கூடும்.

அடுத்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து, முறைகேடான நடத் தையை வெளிப்படுத்தும் பாதுகா வல் அதிகாரிகளுக்கு அதிக பட்சம் $2,000 அபராதமோ, மூன்று மாதச் சிறைத் தண்ட னையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. அத்தகைய நடத்தையை வெளிப்படுத்தும் அதிகாரிகள் மீது குற்ற வழக்கு தொடர்வதற்குப் பதிலாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படக்கூடும். ஒழுங்கற்ற முறையில் நடக்கும் பாதுகாவல் அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கும் நடைமுறை தற்போது நடப்பில் இல்லை.

கடைத்தொகுதி ஒன்றில் பணியில் ஈடுபடும் பாதுகாவல் அதிகாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்