நீர்த்தேக்கத்தில் அபூர்வமாக தென்பட்ட திருக்கை மீன்கள்

நீர்த்தேக்கத்தில் அபூர்வமாக தென்பட்ட திருக்கை மீன்கள்

1 mins read
853c28f2-da1e-4771-a4c1-173f956838e0
-

லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்திலும் அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத் திலும் உள்ள மீன்பிடி தளங்கள் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை மூடப்பட்டிருக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது. சிங்கப்பூர் நீர்ப்பகுதிகளில் வழக்கமாகக் காணப்படாத 'மோட் டோரோ' எனப்படும் ஒருவகை திருக்கை மீன்கள் கடந்த வாரம் லோவர் பியர் நீர்த்தேக்கத்தில் தென் பட்டன.

அந்த நீர்த்தேக்கத்தில் கிட்டத் தட்ட 60 திருக்கை மீன்கள் காணப்பட்டதாக சீன நாளிதழான லியான்ஹ வான்பாவ் வாசகர் ஒருவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் அத்தகைய திருக்கை மீன்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அந்த வாசகர் கூறினார். எனினும் அந்த நீர்த்தேக்கத்தில் தென்பட்ட திருக்கை மீன்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. இச்சம்பவம் தொடர்பான விசா ரணையைத் தான் மேற்கொண்டு வருவதாகக் கூறிய கழகம், இந்த இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் திருக்கை மீன்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் சொன்னது. பொதுவாக இங்கு காணப்படாத இந்த அரிய வகை திருக்கை மீன் களைப் பொதுமக்களில் சிலர் நீர்த் தேக்கத்தில் விடுவித்திருக்க லாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.