பாசிர் ரிஸ் வட்டாரத்தில் நேற்று முன்தினம் லாரி ஓட்டுநர் ஒரு வருக்கும் சைக்கிளோட்டி ஒரு வருக்கும் இடையே சச்சரவு ஏற் பட்டது. காணொளியில் பதிவான இச்சம்பவம் ஃபேஸ்புக்கில் பதி வேற்றம் செய்யப்பட்டது. அந்தக் காணொளி 600,000க்கும் அதிக மான முறை பார்க்கப்பட்டது. காணொளியில் தெரிந்த அந்த லாரியின் இடதுபுற கண் ணாடியை சைக்கிளோட்டி அடித்த தைத் தொடர்ந்து, அவர் மீது அந்த லாரி மோதியது. இதன் விளைவாக அந்த சைக்கிளோட்டி சாலைக்குப் பக்கத்தில் இருந்த புல்வெளியில் விழுந்தார்.
பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கும் பாசிர் ரிஸ் ரைஸுக்கும் இடைப் பட்ட சாலை சந்திப்பில் முற்பகல் 11.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இரு சைக் கிளோட்டிகள் அந்தச் சாலை வழியாக சென்றுகொண்டிருந்த னர். அந்த சைக்கிளோட்டிகளில் ஒருவர், அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரிக்கு முன்னா ல் சாலையின் நடுத்தடத்தில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்தார். இதனால் லாரி ஓட்டுநர் அந்த சைக்கிளோட்டிக்கு இருமுறை எச்சரிக்கை ஒலி எழுப்பினார். அதைப் பொருட்படுத்தாமல் போக்குவரத்துச் சந்திப்பில் நிறுத்திய அந்த சைக்கிளோட்டி, சிறிது நேரம் லாரிக்கு வழிவிடவி ல்லை. பின்னர் ஓரங்கட்டிய அந்த சைக்கிளோட்டி, லாரியின் இடது புற கண்ணாடியை அடித்தார். அவரது செயலால் கோபம் அடைந்த அந்த லாரி ஓட்டுநர், சைக்கிளோட்டி மீது லாரியை மோதினார். கீழே விழுந்த அவருக்கு உதவ மற்றொரு சைக்கிளோட்டி முன்வந்தார்.

