பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதன் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடந்தபோது குற்றம் சாட்டப்பட்ட அனிதா தாமுவுக்கு தலைசுற்றியதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நேற்று கிட்டத் தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் நீதிமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்த இவருக்கு ஈராண்டு, ஏழு மாதங்கள் சிறைத் தண்டனையுடன் பணிப்பெண்ணுக்கு மொத்தம் $12,000 தொகையை நஷ்ட ஈடாகக் கட்டுமாறு உத்தரவிடப்பட்டது. ஷசானா அப்துல்லா என்றும் அழைக்கப்படும் 51 வயது அனிதா (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்), செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது பணிப் பெண்ணைத் துன்புறுத் தியதன் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார். அனிதா குடும்பத்தினருக்கு 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிய வந்தார் இந்தோனீசிய நாட்டைச் சேர்ந்த 29 வயது திருவாட்டி சித்தி கொடிஜா.
பணிப்பெண்ணைத் துன்புறுத்தியவருக்கு ஈராண்டு, ஏழு மாதங்கள் சிறை
1 mins read
-

