தாயைக் குத்திய ஆடவருக்குச் சிறை

தாயைக் குத்திய ஆடவருக்குச் சிறை

1 mins read

தம் 70 வயது தாயாரை இருமுறை முகத்தில் குத்திய 51 வயது தில்லைநாதன் கார்த்திகேசனுக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலையில்லாமல் இருந்த தில்லைநாதனுக்கு எதிராக அவரின் தாயார் திருவாட்டி குணபூஷனம் பக்கிரி தங்கவேலு ஏற்கெனவே தனிநபர் பாதுகாப்பு ஆணை வைத்திருந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் சமையலறையில் ஆடைகளின்றி கிடந்த மகனைப் பார்த்து விட்டு வீட்டுக்கூடத்திற்குச் சென்றார் திருவாட்டி குணபூஷனம். உடனே அவரை நோக்கிச் சென்ற தில்லைநாதன் கத்தியதுடன் அவரை வலது தாடை எலும் பிலும் இடது கண்ணுக்குக் கீழும் குத்தினார். நாள் முழுவதும் மது அருந்தியதாக ஒப்புக்கொண்ட தில்லைநாதன் தம் தாயார் மீது இருந்த ஆத்திரத்தில் அவரைக் குத்தி யதாக மனநோய் மதிப்பீட்டின்போது கூறினார்.