இந்தோனீசியாவில் எரிமலை வெடித்து அதனால் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக $50,000 நன் கொடை அளிப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் உறுதியளித்துள்ளது. சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடையில் உள்ள சுண்டா நீரிணையில் இருக்கும் கடலோர பகுதிகளை சுனாமி அலை தாக்கியதில் குறைந்தது 280 பேர் பலியான தாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் செஞ்சிலுவை சங்கம் வழங்கும் நன்கொடை பேரிடர் மீட்புப் பணிகளுக்காகவும் நீர் சுத்திகரிப்புச் சாதனங்கள், போர்வைகள், பாய்கள், வீட்டுப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்களை வாங்கி விநியோகம் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படும். இந்தோனீசியாவின் செஞ்சிலுவை சங்கத்துடன் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அணுக்கமாகப் பணிபுரிந்து வரு வதாகவும் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக இருவர் கொண்ட குழுவை அனுப்பவிருப்பதாக சங்கம் தெரிவித்தது.
$50,000 நன்கொடை அளிக்க சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் உறுதி
1 mins read

