குரு நானக் 550வது பிறந்த நாள் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்

குரு நானக் 550வது பிறந்த நாள் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்

1 mins read
99be8bb0-a3dd-4907-9a0f-5212702520e3
-

தென்கிழக்கு ஆசியாவிலேயே ஆகப்பெரிய சீக்கியர் விழா சிங்கப்பூர் எக்ஸ்போவில் டிசம்பர் 22 முதல் 25 வரை நடந்தது. சிங்கப்பூரையும் இந்த வட்டாரத் தையும் சேர்ந்த சீக்கியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நான்கு நாள் விழா வில் பல பேராளர்களின் உரை களைச் செவிமடுத்தனர். பக்திப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய கண்காட் சியை அவர்கள் பார்த்தனர். சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் 550வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. மற்றவர்களுக்கு மரியாதை தருவது, எல்லாரையும் உள்ளடக்கு வது, சமத்துவம் ஆகிய சீக்கிய சமூகத்தின் முக்கியமான கோட் பாடுகளை அந்தச் சமூகத்தின ருக்கு நினைவூட்டும் வகையிலும் சீக்கியர்களின் சமயம் பற்றியும் பாரம்பரியம் குறித்தும் மற்றவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவு வதற்காகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 'சீக்கிய இசை விழா' என்ற பெயரில் இந்த விழா நடந்தது. நாள்தோறும் சுமார் 10,000 பேருக்கு இலவச சைவ உணவு வழங்கப்பட்டது.