ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதிக்கு $100,000

1 mins read

வாழ்வுக் கலைச் சங்கம், ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர்கள் கைச்செலவு நிதிக்கு $100,000க் கும் அதிகமான தொகையைத் திரட்டி தந்து இருக்கிறது. ஓவியக் கலைஞர்களும் புதிய கலைஞர்களும் தீட்டிய ஓவியங் களை விற்றதன் மூலம் அந்தச் சங்கம் இந்த அளவுக்குத் தொகை யைத் திரட்டியது. விஸ்மா ஏட்ரியா வில் அக்டோபர் மாதம் நடந்த அறப்பணி கண்காட்சியில் சுமார் 100 படைப்புகள் அரங்கேறின. அவற்றை 36 ஓவியர்களும் புதிய கலைஞர்களும் தீட்டியிருந் தனர். ஜூன் மாதம் நடந்த பயிலரங்கு ஒன்றின் மூலம் அந்தக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட் டனர்.

அந்தப் பயிலரங்கை ஓவியர் டான் கிம் செர், 75, நடத்தினார். அது ST+ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தாதாரர்களுக்கான நன்மை யுடன் செய்திகள் என்ற செயல்திட் டத்தின் அங்கமாக இடம்பெற்றது. அந்த இரண்டு நாள் பயிலரங் கில் சேர்ந்து கலையைக் கற்க $400 செலவாகும். ஆனால் அதில் கலந்துகொண்டவர்கள் $50 மட்டுமே செலுத்தினர். சிங்கப்பூரில் ஓவியக் கலை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வும் கலைஞர்களை உருவாக்கவும் பாடுபடும் இந்தச் சங்கம் ஒரு லாபநோக்கமற்ற அமைப்பாகும். வாழ்வுக் கலைச் சங்கத்தை 46 ஆண்டுகளுக்கு முன் திரு டான் தொடங்கினார். அது முதல் அவர் ஆயிரக்கணக்கான கலைஞர் களுக்குப் பயிற்சி அளித்து உருவாக்கி இருக்கிறார்.