இர்ஷாத் முஹம்மது
உலக முதலீடுகளை இந்தியாவின் குஜராத் மாநிலத் திற்கு ஈர்க்கும் நோக்கத்தில் 'துடிப்புமிக்க குஜராத்' அனைத் துலக உச்சநிலை மாநாடு எதிர் வரும் ஜனவரி மாதம் 18, 19, 20ஆம் தேதிகளில் நடை பெறவுள் ளது. அந்த உச்சநிலை மாநாட்டிற்கு சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 20 பேர் கொண்ட பேராளர் குழு குஜ ராத்திற்கு செல்லவுள்ளது. அந்தக் குழுவை சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை வழி நடத் தும். "பொதுத்துறை, தனியார்துறை யைச் சேர்ந்த 20 நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் சிங்கப்பூரைப் பிரதி நிதிக் கின் றனர். இதுவரை சபை வழிநடத்திய பேராளர் குழுவில் ஆகப் பெரியதாக இது உள்ளது," என்று கூறினார்
சபையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கே பரதன். சிங்கப்பூர் வர்த்தக கூட் ட மைப்பு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் போன்ற பொதுத்துறை அமைப்புகளும் சிங்கப்பூர் ஏர் லைன்ஸ், தெமாசெக் ஹோல்டிங்ஸ், அசென்டாஸ், சிங்கப்பூர் துறைமுக ஆணையம் போன்ற அரசு சார்பு நிறுவனங்களும் மாநாட்டில் பங்கு பெறுகின்றன. ஒன்பதாவது முறையாக நடக் கும் இந்த மாநாடு, அனைத்துலக அளவில் சமூகப் பொருளியல் மேம்பாடு குறித்த கருத்துகளைப் பற்றி விவாதிக்கும் தளமாக உரு மாறியுள்ளது. உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அள விலும் 'புதிய இந்தியா' உரு வாவதற்குத் தேவையான முழு பொருளியல் வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடக்கவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். அவர் குஜ ராத்தின் முதலமைச்சராக இருந்தபோது 2003ஆம் ஆண்டு 'துடிப்புமிக்க குஜராத்' உச்சநிலை மாநாட்டை அறிமுகப்படுத்தினார்.

