மரின் பரேடில் இருக்கும் சந்தை ஒன்றில் காரை ஓட்டி மூன்று பேரைக் காயப்படுத்திவிட்டதற்காக தோ பாயோ நார்த்தில் இருக்கும் பீட்டி உயர்நிலைப் பள்ளியின் துணை முதல்வரான லிம் சூன் வாய், 52, என்பவருக்கு நேற்று 10 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதன் மூலம் மூன்று பேருக்குக் காயத்தை விளைவித்ததற்காக இரண்டரை ஆண்டுகள் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மரின் டெரஸ் 50ஏ புளோக் கார் பேட்டையில் சென்ற ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 12.34 மணிக்கு நிகழ்ந்தது. சந்தைக்குள் கார் நுழைந்ததால் காயம் அடைந்த மூவரில் இருவர் பெண்கள். அவர்களுக்கு வயது 58 மற்றும் 33. ஒருவர் 66 வயது ஆடவர்.
பள்ளி துணை முதல்வருக்குச் சிறை
1 mins read

