ஃபேர்பிரைஸ் முன்னோடித் தலைமுறையினரின் விலைக்கழிவு சலுகை நீட்டிப்பு

ஃபேர்பிரைஸ் முன்னோடித் தலைமுறையினரின் விலைக்கழிவு சலுகை நீட்டிப்பு

1 mins read
ec0b9d76-45fd-48f3-83b2-3c2523516276
-

முன்னோடித் தலைமுறையினருக்கான விலைக்கழிவுச் சலுகை அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருள் வாங்கும் முன்னோடித் தலைமுறையினர் மேலும் ஆறு மாதங்களுக்கு விலைக்கழிவுச் சலுகையைப் பெறலாம். இந்தத் திட்டம் நான்காவது முறையாக நீட்டிக்கப்படுவதாக ஃபேர்பிரைஸ் நேற்று அறிவித்தது. முன்னோடித் தலைமுறையின ருக்கான விலைக்கழிவுச் சலுகை அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்படும் என்று ஃபேர் பிரைஸ் தெரிவித்தது. இதனைச் செயல்படுத்த ஃபேர்பிரைஸ் $2 மில்லியனுக்கு மேல் செலவு செய் கிறது. 2014ஆம் ஆண்டு இந்தத் திட் டம் தொடங்கப்பட்டது முதல் இதன்கீழ் சுமார் $16 மில்லியன் மதிப்பு வரை விலைக் கழிவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து திட்டத் தின் உறுப்பினர்களுக்கு திங்கள் வியாழக்கிழமைகளில் மூன்று விழுக்காடு விலைக்கழிவு வழங் கப்பட்டு வருகிறது. இதனுடன் முதியோருக்கான விலைக்கழிவுத் திட்டத்தை யும் முன்னோடித் தலைமுறையினர் பயன்படுத்தலாம் என்று ஃபேர் பிரைஸ் தெரிவித்தது.