வாக்குமூலத்தை மாற்றி எழுதிய போலிஸ் அதிகாரியின் குற்றம் நிரூபணம்

வாக்குமூலத்தை மாற்றி எழுதிய போலிஸ் அதிகாரியின் குற்றம் நிரூபணம்

2 mins read
ed64ed8a-1d1f-40e0-ad62-b0cd6b066d6f
-

திருவாட்டி கலைவாணி காளிமுத்து. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் வாக்கு மூலத்தை பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் மாற்றியதை நீதிமன்றம் நேற்று உறுதி செய்திருக்கிறது. மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண், நடந்தது குறித்து எந்த ஆட்சேபனையும் தெரி விக்கவில்லை என்று கூறியதாக மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் கலைவாணி காளிமுத்து, 38, அவ ரது வாக்குமூலத்தை மாற்றி எழுதி யிருந்தார். இதன் விளைவாக, குற்றத்தின் தொடர்பில் பொய்ப் புகார் அளித்ததன் பேரில் இந்தப் பெண்ணுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புகார் கொடுத்த அப்பெண்ணை உடனே சந்திக்க முடியாததால் இந்த விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கலைவாணி வாக்குமூலத்தை மாற்றி யதாக விசாரணையில் பின்னர் தெரிய வந்தது. தற்போது தமது பணியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள் ளார் கலைவாணி. அங் மோ கியோ போலிஸ் பிரி வில் செப்டம்பர் 2011க்கும் நவம்பர் 2016க்கும் இடையே விசாரணை அதிகாரியாகப் பணிபுரிந்த கலைவாணிக்கு வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் தமக்கு நேர்ந்தது குறித்து போலிசாரிடம் 2016ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி புகார் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்டெஃபனி சியூ தெரிவித்தார். இந்தப் புகாரை விசாரிக்க கலைவாணி ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்க ஏற்பாடு செய்வதில் கலைவாணிக்குச் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

நவம்பர் 13ஆம் தேதி கலை வாணி தமது அலுவலகத்தில் போலி யான புகாரைத் தயாரித்தார். பாதிக்கப்பட்ட பெண், தன்னைத் தொட்டவரை அவரும் தொட்டதாக வும் இதில் அந்தப் பெண்ணுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாதது போல் காட்டும் விதமாக அவரது வாக்குமூலம் மாற்றப்பட்டது. போலி வாக்குமூல ஆவணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை போலவே கலைவாணி கையெழுத்திட்டார்.