128 குத்தகையாளர்களுக்கு அபராதம், கண்காணிப்பு

128 குத்தகையாளர்களுக்கு அபராதம், கண்காணிப்பு

1 mins read

சுத்தமாக இருந்த கால்வாய் நீர் (இடது படம்), கட்டுமானத் தளங்களில் வெளியேற்றப்பட்ட நிலத்தடி நீரால் கால்வாய் அசுத்தமாகக் காட்சியளிக்கிறது (வலது படம்). படங்கள்: பொதுப் பயனீட்டுக் கழகம்

பொது வடிகால் கட்டமைப்புக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய கட்டு மானப் பணிகள் தொடர்பாக 128 குத்தகையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது வடிகால் கட்டமைப்புக்கு அதிகாரமின்றி மாற்றங்களைச் செய்தது நிலக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது ஆகி யவை தொடர்பாக இந்த குத்த கையாளர்கள் 203 குற்றங்களைச் செய்தி ருப்பது உறுதி செய்யப் பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கட்டுமானத் தளங்கள் மீது நடத்தப்படும் வழக்கமான சோத னைகள் வழியாகவும் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் வழி யாகவும் இந்த குற்றச்செயல்கள் பற்றி தெரிந்துகொண்டதாக கழ கம் கூறியது. "வடிகால் கட்டமைப்புகளைப் பாதிக்கும் கட்டுமானப் பணிகள், திடீர் வெள்ளத்தையும் ஏற் படுத்துவதுடன் நீர்த்தேக்கங் களின் தண்ணீர்த் தரத்தை பாதிக்கின்றன. எனவே இதனைப் பொதுப் பயனீட்டுக் கழகம் கடுமையாகக் கருதுகிறது," என்று கழகம் தனது அறிக்கையில் குறிப் பிட்டது. இத்தகைய பணிகளால் குழாய் களில் மண் அடைத்துக் கொள் கிறது. இதனால் வடிகால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக கழகத்தின் நீர்த்தேக்கப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர் இயோ கெங் சூன் தெரிவித்தார்.