'த கவரேஜ்' கட்டுரையில் போலியான செய்திகள் இருப்ப தாகவும் அவை அவதூறானவை என்றும் மலேசியாவிலுள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்தது.
நிதி ஆலோசகரும் வலைப்பதிவா ளருமான லியோங் சு ஹியன், பிரதமர் லீக்கு எதிராக பதில் வழக்கைத் தொடுத்திருக்கிறார். தனக்கு எதிராக பிரதமர் லீ தொடுத்துள்ள அவதூறு வழக்கு நீதிமன்ற முறையை தவறாகப் பயன்படுத்தும் விதமாக இருப் பதாக திரு லியோங் தெரிவித் திருக்கிறார். கள்ளப்பணத்தை நல்ல பண மாக மாற்ற 1எம்டிபி நிறு வனத்திற்குத் திரு லீ உதவியிருப்பதாகக் கூறும் கட்டுரை ஒன்றை திரு லியோங் தனது ஃபேஸ்புக் பக்கத் தில் பகிர்வு மட்டும் செய்திருந்ததாக வும் மேலும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் செய்ததுபோல இவரும் செய்திருப்பதாகவும் திரு லியோங் கின் வழக்கறிஞர் லிம் தியேன் தெரிவித்தார்.
திரு லீ பற்றி கட்டுரை சரியோ தவறோ, அவரும் சிங்கப்பூரும் எவ்வாறு விசாரணைக்கு இலக் காயினர் என்பது பொது அக்கறை யைச் சார்ந்த ஒன்று என்ற வாதத் தையும் திரு லிம் முன்வைத்தார். 'கார்சன் லா சேம்பர்ஸ்' சட்ட நிறுவனத்தைச் சார்ந்த திரு லிம், 'பீப்பள்ஸ் வாயிஸ்' என்ற எதிர்க் கட்சி ஒன்றையும் தொடங்கி வைத் தார். மலேசியாவைச் சேர்ந்த செய்தி இணையத்தளமான 'த கவரேஜ்' பதிப்பித்த இந்தக் கட்டுரையின் இணைப்பை திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து பிரதமர் லீ சியன் லூங் கடந்த மாதம் அவர் மீது வழக்கு தொடுத்தார்.
இந்தக் கட்டுரையில் குறிப் பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் ஆதார மற்றவை என்றும் பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் கூறினார். தீய நோக்கத்துடன் திரு லியோங் திரு லீயின் நற்பெ யருக்குக் களங்கம் விளைவிக்க எண்ணி, இந்தக் கட்டுரையைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாக அவர்கள் கூறினர்.

