அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்பில் வெட்டுக்கத்தியைக் கொண்டு தனது அண்டை வீட்டாரைத் தாக்க முற்பட்ட 61 வயது மூதாட்டி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சிராங்கூன் நார்த் புளோக் 157ல் இந்த மூதாட்டி, தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வரும் இரைச்சலைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக போலிசார் கூறினர்.
அதிகாலை நான்கு மணிக்கு அந்த வீட்டின் கதவிலும் சன்னலிலும் இந்த மூதாட்டி வெட்டுக்கத்தியைக் கொண்டு தட்டிக்கொண்டிருந்ததை போலிஸ் அதிகாரிகள் கண்டனர். வெட்டுக்கத்தியைக் கீழே போட போலிசார் பலமுறை கோரியும் மூதாட்டி மறுத்ததால் அவர்மீது மின்சாரத்தைப் பாய்ச்சும் டேசர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. ஆயி னும், மூதாட்டியைப் பலவந்தமாக கைது செய்யாமல் ஒத்து ழைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டதாக போலிசார் கூறினர். செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மூதாட்டிக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என போலிஸ் தெரிவித்தது. அவர் அதே நாளில் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஐந்து நிமிட காணொளி ஒன்று யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது

