மைனா பறவை இனத்தைக் கட்டுப்படுத்த ராட்சத பொறி

மைனா பறவை இனத்தைக் கட்டுப்படுத்த ராட்சத பொறி

1 mins read
e7906618-cf97-480a-ba7a-a6887cf5ccc9
-

பொத்தோங் பாசிர் தொகுதியில் அதிகரித்துள்ள மைனா பறவை இனத்தைக் கட்டுப்படுத்த புதிய ராட்சத பொறி சோதனை அடிப் படையில் பயன்படுத்தப்பட்டுள் ளது. மைனா பறவைகளின் இரைச் சல், அவற்றின் எச்சம் ஆகியவற் றால் அவதிக்குள்ளாகியிருக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரான திரு சீத்தோ யீப்பின் னிடம் புகார் அளித்தனர். மைனா பறவைகளைப் பிடிக்க வகை செய்யும் "ரூஸ்ட் நெட் சிஸ் டம்' எனும் ராட்சத பொறி நேற்று முன்தினம் இரவு பொத்தோங் பாசிர் அவென்யூ 1, புளோக் 146க்கு அருகில் பொருத்தப்பட் டது என்று வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்தது. அது இப்போது அகற்றப்பட்டு விட்டது என்றும் அடுத்த எந்த இடத்தில் அது தேவைப்படுகிறதோ அங்கு அது பொருத்தப்படும் என் றும் ஆணையம் கூறியது. பொத்தோங் பாசிர் பகுதியில் தற்போது சுமார் 2,800 மைனா பறவைகள் ஓய்வு எடுக்க வரு கின்றன என்று தெரிவித்த ஆணையம், இந்தப் பறவையால் ஒலி இரைச்சல் பிரச்சினைகள், சுகாதாரக் கேடுகள் போன்றவை நிகழக்கூடும் என்றும் சொன்னது.