குடிநுழைவுக் குற்றங்களுக்காக கைதான பெண்களிடம் பாலியல் சேவைகளைப் பெற்ற குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரி ஒருவர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். 51 வயது ஸ்டாஃப் சார்ஜண்ட் சின் பெங் சம் (படம்), ஆணையம் மேற்கொள்ளும் திடீர் சோதனைகள் பற்றி சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக ஆணையத்தில் பணியாற்றி வரும் திரு சின், ஊழல் தடுப்புச் சட்டம், அலுவல்முறை ரகசியங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழும் நீதியைத் தடுக்கும் குற்றம் ஆகியவற்றின் கீழும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். மூத்த சட்ட அமலாக்க அதிகாரியாக இருந்துகொண்டே குற்றங்களைப் புரிந்துள்ள திரு சின்னுக்கு 24 முதல் 28 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அடுத்த மாதம் திரு சின் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார். அப்போது அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.
குடிநுழைவு குற்றவாளிகளிடம் பாலியல் சேவை: ஒப்புக்கொண்ட அதிகாரி
1 mins read
-

