எஸ்பிஎஸ் டிரான்சிட் தலைமை நிர்வாகி பதவி விலகல்

எஸ்பிஎஸ் டிரான்சிட் தலைமை நிர்வாகி பதவி விலகல்

1 mins read
5743784f-167e-48c3-a349-c365d7edd7d5
-

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத் தின் தலைமை நிர்வாகி திரு கான் ஜுவே கியட் (படம்) தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளார். கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தின் கீழ் செயல்படும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளார் திரு கான். முதலில் தலைமைச் செயலாக்க அதிகாரி, பின்னர் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய அவர், பின்னர் 2010ஆம் ஆண்டி லிருந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயலாற்றி வருகிறார். தகாத உறவு காரணமாக அவர் பதவி விலகியுள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. புதிய தலைமை நிர்வாகி விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று கூறியது.