பறவைக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

1 mins read
51f0b4b1-f372-4dee-a9c7-83f19341c500
-

உயிருள்ள 40 பறவைகளை சிங்கப்பூருக்குள் கடத்தும் 49 வயது சிங்கப்பூரர் ஒருவரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யைக் தமது காரில் கடந்து செல்ல முயன்ற அவரது காரின் பின் இருக்கையிலிருந்து விசித்திர மான ஒலி கேட்டது. இதனைக் கவனித்த குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) அதிகாரி கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப் பட்ட அந்த காரில் கூடுதல் சோதனை நடத்தினர் என்று ஐசிஏ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தது. கூடுதல் சோதனையின்போது பின்னிருக்கையின் கீழ் வைக்கப் பட்டிருந்த இரண்டு பெட்டிகளில் உயிருள்ள 40 பறவைகள் இருப் பதை ஐசிஏ அதிகாரிகள் கண்டு பிடித்தனர். குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் இச்சம்பவம் பற்றிய புலனாய்வை வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையத் திடம் ஒப்படைத்துள்ளது. பெட்டிக்குள் இருந்த பறவைகள் இப்போது வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையத் தின் பராமரிப்பில் உள்ளன.