தமது அண்டை வீட்டாருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த 64 வயது ஈசூன் மூதாட்டிக்கு நேற்று ஆறு மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது. ஈசூன் ரிங் ரோடு, புளோக் 112ன் 5வது மாடியில் வசிக்கும் திருவாட்டி டான் சியூ ஙோ (படம்) நடு இரவில் தமது வீட்டுக்கு மேல் மாடியில் வசிக்கும் வீட்டுக்குச் சென்று அந்த வாசலில் துர்நாற்றம் வீசும் திரவங்கள், கழிவறை காகிதச்சுருள்கள் போன்றவற்றை போட்டுவிட்டு செல்வார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தல், குறும்புச் செயல் புரிதல், திருட்டு போன்ற எட்டு குற்றச்சாட்டுகளை திருவாட்டி டான் ஒப்புக்கொண்டார். மூதாட்டியின் செயல்கள் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்ட கண் காணிப்பு கேமராவில் பதிவாகின. திருவாட்டி டான் இந்தச் செயல்களை கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி முதல் இவ்வாண்டு மார்ச் 4ஆம் தேதி வரை புரிந்துள்ளார்.
தொல்லை கொடுத்த மூதாட்டிக்கு 6 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு
1 mins read
-

