'அனாக் கிராக்கட்டாவ் மலைப் பகுதிக்கருகில் செல்ல வேண்டாம்'

1 mins read
f1f3fb5c-58ed-42bb-8d4f-92000736b7dd
-

சுமத்ரா, லம்புங்கில் உள்ள 'அனாக் கிராக்கட்டாவ்' மலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண் டாம் என்று சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு பயண ஆலோசனை வழங்கியுள்ளது. அந்த எரிமலை மேலும் வெடிக்கக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுவதால், இந்தோனீசிய அமைப்புகள் அந்தப் பகுதியில் உச்ச விழிப்புநிலையை உயர்த்தியிருக்கிறது. அதன் காரணமாக சுண்டா நீரிணைப் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே இருப்பவர்கள் உள்ளூர் செய்திகளையும் மேம்பாடுகளையும் உன்னிப்பாகக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உடனடி தூதரக உதவி தேவைப்படுவோர் ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், மேடானில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம்.