19க்கும் குறைந்த வயதினர் புகைப்பது சட்டவிரோதம்

சிங்கப்பூரில் புகையிலைப் பொருட் களை வாங்குவது, பயன்படுத்து வது, வைத்திருப்பது, விற்பது, தருவித்துத் தருவது ஆகியவற்றுக் கான குறைந்தபட்ச வயது 18 லிருந்து 19ஆக வரும் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 1) முதல் உயரும். இத்தகைய காரியங்களுக்கான குறைந்தபட்ச சட்டபூர்வ வயதை மூன்றாண்டுகளில் படிப்படியாக 21க்கு உயர்த்துவது அரசாங்கத் தின் திட்டமாகும். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 1 முதல் இந்தச் சட்டபூர்வ வயது 19 ஆகிறது. நாடாளுமன்றத்தில் சென்ற நவம்பர் மாதம் இதற்கான மசோதா நிறைவேறியது.

புகையிலை (விளம்பரம், விற் பனைக் கட்டுப்பாடு) (திருத்தம்) மசோதா இதற்கு வகை செய்கிறது. இந்தத் திருத்த மசோதாவின் விளைவாக, 2020 ஜனவரி 1ஆம் தேதி குறைந்தபட்ச சட்டபூர்வ வயது 20 ஆகவும் 2021 ஜனவரி 1 முதல் இந்த வயது 21 ஆகவும் உயரும். இதேப்போல ஆர்ச்சர்ட் ரோட் டில் பொது இடங்களை உள்ளடக்கி இருக்கும் ஒரு வட்டாரத்திற்குள் புகைக்க ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். அந்த மண்டலத்தின் உள்ளே இருக்கும் உணவு நிலையங்களில் புகைக்கக்கூடாது. சிகரெட்டை பற்ற வைக்கவும் கூடாது. புகைக்க வேண்டுமானால் அதற்காகவே ஒதுக்கப்பட்டு இருக்கும் 40க்கும் அதிக இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தேசிய சுற்றுப்புற வாரியம் மார்ச் 31 வரை ஆலோ சனை அணுகுமுறையைக் கைக் கொள்ளும். இருந்தாலும் அந்தக் கால கட்டத்திலும் குற்றம் புரிவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் பொதுமக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் சிகரெட் புகைப்பதைக் குறைக்கவும் சுகாதார அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக குறைந்தபட்ச சட்டபூர்வ வயது உயர்த்தப்படுகிறது என்று இந்த அமைச்சு நேற்று அறிக்கை ஒன் றில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!