மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ (படம்), சீனாவின் நீண்டகால நண்பராகத் திகழ்ந்து, அந்த நாட்டை அணுக்கமாகக் கண்காணித்து வந்து, அதன் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சீனாவில் சீர்திருத்தப் பணி கள் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதை நினைவுகூரும் நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி இடம்பெற்றது. அப்போது சீனாவின் சீர்திருத்தப் பணிகளுக்கும் அந்நாட்டுப் பொருளியல் தாராளமயமாவதற் கும் கைகொடுத்த வெளிநாட் டவர் பத்துப் பேருக்குச் சீர்திருத்த நட்புறவுப் பதக்கம் வழங்கி சீனா கௌரவித்தது. அவர்களுள் அமரர் லீயும் ஒருவர்.
இந்த நிலையில், சிங்கப்பூரைத் தோற்றுவித்த பிரதமர் லீ குவான் இயூவிற்கு இந்த அரும்பெரும் கௌரவம் கிட்டியிருப்பது, சீனா வின் சீர்திருத்தத்திலும் தாராள மயமாதலிலும் அவர் அளித்த நீண்டகால ஆதரவையும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் லீ குறிப் பிட்டுள்ளார். சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு எழுத்து வழியாக தாம் அளித்த நேர்காணலில் திரு லீ இவ்வாறு தெரிவித்துள்ளார். "37 ஆண்டுகாலத்தில் அமரர் லீ 33 முறை சீனா சென்றார். முக்கிய கடலோர நகரங்கள் மட்டுமின்றி, சீனாவின் உள் மாநிலங்களுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும் சென்றார். சீனாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மேம்பாட்டையும் அவர் நேரில் கண்டுள்ளார். இதன்மூலம் சீன சமுதாயத்தையும் தங்க ளது சமூகத்தை உருமாற்றி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அவர்கள் கொண் டிருந்த மனஉறுதியையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்," என்று பிரதமர் கூறினார்.

