தீ வைத்ததாக பதின்மவயது பெண் கைது

1 mins read

தீவைத்த குற்றத்தைப் புரிந்த தாகச் சந்தேகிக்கப்படும் 16 வயது பெண் கைது செய்யப் பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் சர்கியூட் சாலையில் உள்ள புளோக் 34இன் தரைத்தளத்தில் மெத்தை ஒன்றுக்கு அந்தப் பெண் தீவைத்ததாக நம்பப்படு கிறது. இந்தத் தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இதுதொடர்பாக பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி னர்.

தீவைத்ததாக நம்பப்படும் பெண்ணை அந்த வட்டாரத்தில் இருந்தோரிடம் விசாரணை நடத் தியும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவி யுடனும் அதிகாரிகள்அடையாளம் கண்டனர். சர்கியூட் சாலை புளோக் 65இல் அந்தப் பெண் அதே நாளில் கைது செய்யப் பட்டார்.

சர்கியூட் சாலை புளோக் 36இன் தரைத்தளத்தில் இருந்த குப்பைத் தொட்டிக்கும் அதே புளோக்கின் 14வது மாடியில் இருந்த துடைப்பத்துக்கும் அவர் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப் படலாம்.