கடந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து மாற்று மின்சார வர்த்தகர்களிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டம் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டம் நடைமுறையில் உள்ள வட்டாரங்களில் வசிக்கும் மூன்றில் ஒருவர் மாற்று மின்சார வர்த்தகர்களிடமிருந்து மின் சாரத்தை வாங்க தெடங்கி உள்ளனர். மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாக மாற்று மின்சார வர்த்தகர்களிடமிருந்து மின்சாரம் வாங்குவோர் தெரிவித்துள்ளனர். நாளையிலிருந்து பீஷான், பொங்கோல், செங்காங் ஆகிய வட்டாரக் குடியிருப்பாளர் களுக்கும் இத்தெரிவு வழங்கப் படும்.
மாற்று மின்சார வர்த்தகர்: மூன்றில் ஒருவர் தேர்வு
1 mins read

