மார்ச் மாதம் வரை எரிவாயுக் கட்டணம் குறைகிறது

மார்ச் மாதம் வரை எரிவாயுக் கட்டணம் குறைகிறது

1 mins read

அடுத்த காலாண்டில் எரிவாயுக் கட்டணம் குறைகிறது. நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு குடும்பத்துக்கான எரிவாயுக் கட்டணம் 0.81 விழுக்காடு குறையும் என்று சிட்டி கேஸ் டிரஸ்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி எரிவாயுக் கட்டணம் ஒரு kWh எரிவாயுவிற்கு 0.16 காசு குறையும். அதாவது 19.67 காசிலிருந்து 19.51 காசாகக் குறையும். பொருள், சேவை வரியுடன் சேர்த்து திருத்தப்பட்ட கட்டணம் ஒரு kWh எரிவாயுவிற்கு 20.88 காசு என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எரிபொருளின் விலை இறக்கம் கண்டுள்ளதால் முந்திய காலாண்டைவிட எரிவாயுக் கட்டணம் குறைவதாக சிட்டி கேஸ் டிரஸ்ட் நிறுவனம் கூறியது. எரிவாயுத் துறையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான எரிசக்தி சந்தை ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறி முறைகளின்படி எரிவாயு வரியை சிட்டி கேஸ் டிரஸ்ட் நிறுவனம் மறுஆய்வு செய்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து இன்று வரை எரிவாயுக் கட்டணம் 2.29 விழுக்காடு அதிகரித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஆக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை அது 3.78 விழுக்காடு கூடியது.