சமூகத் தோட்ட திட்டத்தை 2008ஆம் ஆண்டில் தென் மேற்கு சமூக மேம்பாட்டு மன்றமும் தேசிய பூங்கா கழகமும் தொடங்கி வைத்தன. தென் மேற்கு வட்டாரத்தில் ஒரு மில்லியன் உள்ளூர் தாவர வகைகளைப் பயிரிடும் இலக்கோடு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் தென் மேற்கு வட்டாரத்தில் உள்ள 152 சமூகத் தோட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உள்ளூர் தாவர வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. அங்குள்ள சமூகத் தோட்டங் களை 3,000க்கும் அதிகமான தொண்டூழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
300 தோட்டத் தலைவர்களில் ஒருவரான 62 வயது திருவாட்டி லீயும் தோட்டங்களைப் பராமரித்து வருகிறார். "பகல் நேரங்களில் மூத்தோரும் குழந்தைகளும் தோட்டத்துக்கு வந்து நடைப்பயிற்சியில் ஈடுபடு கின்றனர். "வேலை முடிந்து மாலை நேரங்களில் இளம் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தோட்டங்களுக்கு வரு கின்றனர். "பிள்ளைகள் தோட்டங்களில் விளையாடுகின்றனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொண் டூழியர்களும் வந்து செல்கின் றனர். இந்தத் தோட்டங்களைப் பராமரிக்க நாங்கள் அனைவரும் பங்களிக்கிறோம்," என்றார் திருவாட்டி லீ.

