கேலாங் ஹோட்டலில் இறந்து கிடந்த மாது; சந்தேகநபர் கைது

கேலாங் ஹோட்டலில் இறந்து கிடந்த மாது; சந்தேகநபர் கைது

2 mins read
735528a8-1940-4955-a109-9713a96f8be0
-

கேலாங்கிலுள்ள ஹோல்டன் டிராகன் ஹோட்டலில் ஞாயிறு அன்று 34 வயது இந்தோனீசிய மாது இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில் 29 வயது பங்ளாதேஷ் நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்துப் போலிசுக்கு ஞாயிறு இரவு 10.45க்குத் தகவல் கிடைத்தது. வெஸ்டர்அவுட் ரோட்டிலுள்ள அந்த ஹோட்டலின் அறை 61ல் அம்மாது அசைவின்றிக் கிடந்ததாக போலிஸ் கூறியது. அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். கேலாங் ஹோட்டலில் இறந்து கிடந்த மாது; சந்தேகநபர் கைது

கேலாங்கிலுள்ள ஹோல்டன் டிராகன் ஹோட்டலில் ஞாயிறு அன்று 34 வயது இந்தோனீசிய மாது இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில் 29 வயது பங்ளாதேஷ் நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்துப் போலிசுக்கு ஞாயிறு இரவு 10.45க்குத் தகவல் கிடைத்தது. வெஸ்டர்அவுட் ரோட்டிலுள்ள அந்த ஹோட்டலின் அறை 61ல் அம்மாது அசைவின்றிக் கிடந்ததாக போலிஸ் கூறியது. அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தோனீசியரான அந்த மாதும் கைதான பங்ளாதேஷியும் வொர்க் பர்மிட்டில் இங்கு வேலை பார்ப்பவர்கள் என நம்பப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர் எனப் போலிஸ் கூறியது. இருவரும் மூன்று மணி நேரத்துக்கு அறையை வாடகைக்கு எடுத்ததாகவும் பின்னர் ஐந்து மணி நேரத்துக்கு நீட்டித்ததாகவும் ஆனால் 10 மணி நேரமாகியும் எவரும் அறையைக் காலி செய்யவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஹோட்டல் ஊழியர் ஒருவர் சொன்னதாக வான்பாவ் செய்தி தெரிவித்தது. ஹோட்டல் ஊழியர் மேலே சென்று பார்த்தபோது மாது இறந்து கிடந்ததை அறிந்ததாகவும் அந்தச் செய்திக் கூறியது. கைதான பங்ளாதேஷி மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும். இந்தோனீசியரான அந்த மாதும் கைதான பங்ளாதேஷியும் வொர்க் பர்மிட்டில் இங்கு வேலை பார்ப்பவர்கள் என நம்பப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர் எனப் போலிஸ் கூறியது. இருவரும் மூன்று மணி நேரத்துக்கு அறையை வாடகைக்கு எடுத்ததாகவும் பின்னர் ஐந்து மணி நேரத்துக்கு நீட்டித்ததாகவும் ஆனால் 10 மணி நேரமாகியும் எவரும் அறையைக் காலி செய்யவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஹோட்டல் ஊழியர் ஒருவர் சொன்னதாக வான்பாவ் செய்தி தெரிவித்தது. ஹோட்டல் ஊழியர் மேலே சென்று பார்த்தபோது மாது இறந்து கிடந்ததை அறிந்ததாகவும் அந்தச் செய்திக் கூறியது. கைதான பங்ளாதேஷி மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும்.