சிங்கப்பூர் - மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் ஜனவரி 8ல் சந்திப்பு

சிங்கப்பூர் - மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் ஜனவரி 8ல் சந்திப்பு

1 mins read
a1a16208-994a-4c04-a48e-4b080e7661bb
-

சிங்கப்பூர், மலேசியாவுக்கிடையே உள்ள கடற்துறை, ஆகாயவெளிப் பிரச்சினைகள் பற்றிப் பேச்சு நடத்த இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இம்மாதம் 8ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இருநாடுகளும் கடல் எல்லை, ஆகாயவெளிப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. "பிரதமர் லீ சியன் லூங் சார் பாக இதுகுறித்த செய்தியை மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீரிடம் தெரிவிக்க துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியனும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் நேற்றுமுன் தினம் மலேசியாவின் புத்ராஜெயாவு க்குச் சென்றனர்," என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது கூறினார்.

இருநாட்டுப் போக்குவரத்து அமைச்சர்களும் விரைவில் சந்திக்கும் திட்டம் உள்ளது என்றும் அமைச்சு குறிப் பிட்டுள்ளது. கடற்துறை பிரச்சினைகள் பற்றி ஜனவரி மாதம் நல்லிணக் கத்துடன் பேச்சு நடத்த சிங்கப்பூர் தயாராகிறது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் முன்னதாகக் கூறியிருந்தார். ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஆகாயவெளிப் பிரச்சினைகளும் இடம்பெறும் என்று மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா கூறியுள்ளார்.