ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைக்கத் தடை: ஏற்பாடு நடப்புக்கு வந்தது

ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைக்கத் தடை: ஏற்பாடு நடப்புக்கு வந்தது

1 mins read
d19a3e9f-4bd4-4beb-b2ba-efc974b6f4a2
-

ஆர்ச்சர்ட் ரோடு இப்போது சிகரெட் புகை இல்லாத பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. அங்கு பொது இடங்களில் யாரும் இனி மேல் புகைக்க முடியாது. சிகரெட் புகைக்கவேண்டு மானால் அதற்காக ஒதுக்கப்பட் டுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும். இத்தகைய ஓர் ஏற்பாடு நேற்று முதல் நடப்புக்கு வந்தது. புகைப்பவர்களுக்குப் புதிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை கூற தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் ஆர்ச்சர்ட் ரோட்டில் புதிய சீருடையுடன் பணியில் இருப்பார்கள். அவர்கள் பிரபல மான கடைத்தொகுதிகளில் சுற் றுக்காவலில் ஈடுபட்டு இருப்பர். தொடக்கத்தில் மூன்று மாத காலத்திற்கு தவறு செய்வோருக்கு எதிராக அந்த அதிகாரிகள் எச் சரிக்கை விடுப்பார்கள். ஆலோ சனை கூறுவார்கள். ஏப்ரல் முதல் குற்றம் செய்வோருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் இடம் பெறும்.

ஆர்ச்சர்ட் ரோடு சிகரெட் புகை இல்லா வட்டாரமாக மாற்றப்பட்டு இருப்பதை விளம்பரப்படுத்த இயக் கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ச்சர்ட் ரோடு சிகரெட் புகை யில்லா பகுதியாக மாறிய முதல் நாளான நேற்று, புடி முள்யாவன், 38, என்ற இந்தோனீசிய சுற்றுப் பயணி நீ ஆன் சிட்டிக்கு வெளியே ஒரு குப்பைத்தொட்டிக்குப் பக்கத் தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்தார்.

ஆர்ச்சர்ட் ரோடு புகைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள வட்டாரமாக மாறியிருக்கிறது என்பதை எடுத்துக்கூறும் இந்தச் சுவரொட்டி ஆர்ச்சர்ட் ரோடு எம்ஆர்டி நிலையத்தில் இடம்பெற்று இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்