பிளாஸ்டிக் மறுபுழக்க நிறுவனத்தில் தீ

பிளாஸ்டிக் மறுபுழக்க நிறுவனத்தில் தீ

1 mins read

கழிவுப் பொருட்களை மறுபுழக்கத்திற்குத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் நேற்று தீ மூண்டது. துவாஸ் வியூ சர்க்கியூட்டில் இருக்கும் அந்தக் கட்டடத்தில் தீ மூண்டதையடுத்து அந்தப் பகுதியில் சாலைகள் மூடப்பட்டன. அங்கு யாரும் வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. எண் 8 துவாஸ் வியூ சர்க்கியூட் முகவரியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் காலை சுமார் 9.40 மணிக்குத் தீ பற்றி தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், டயர்கள் எல்லாம் தீப்பிடித்து எரிந்தன. பல தீயணைப்பு வாகனங்களும் ஆளில்லா தீயணைப்பு இயந்திரமும் தீயை அணைத்தன. நேற்று நண்பகல் வாக்கிலும் தீ எரிந்துகொண்டு இருந்தது. விபத்தில் யாருக்கும் காயமில்லை.