பாலியல் சேவைகளை லஞ்சமாகப் பெற்ற குடிநுழைவு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாலியல் சேவைகளை லஞ்சமாகப் பெற்ற குடிநுழைவு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை

1 mins read
39f8d3cc-96b3-4902-80f5-10c253222987
-

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரி 51 வயது சின் பெங் சம் (படம்), தம் பதவியைத் தவறாகப் பயன்படுத் தியதுடன் வேலைத் தொலைபேசி வழி அதிகாரிகள் நடத்தவிருக்கும் சோதனை நடவடிக்கை பற்றி முன்கூட்டியே மூன்று சீன நாட்டுப் பெண்களுக்குத் தெரிவித்ததற்காக நேற்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். இரு சீன நாட்டு பெண்மணி களிடமிருந்து பாலியல் சேவை களை பெற்றுக்கொண்டு அவர் களின் சிறப்பு அனுமதியின் தேதியை சின் நீட்டித்தார்.

அலுவல் முறை இரகசியங்கள் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளையும் சென்ற மாதம் 28ஆம் தேதியன்று சின் ஒப்புக் கொண்டார். இவற்றுடன் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட் டதன் தொடர்பில் ஐந்து குற்றச் சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.

சின் அனுப்பியிருந்த குறுந் தகவல்கள் ஒரு சீன நாட்டுப் பெண்ணின் கைபேசியில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சின்னின் குற்றங்கள் தெரிய வந்தன. நிர்வாகம் சின்னை விசாரித்தபின், அவர் அக்குறுந் தகவல்களைக் கைபேசியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையப் பேச்சாளர் கூறினார்.