சென்ற மாதம் கை மாறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகளின் எண் ணிக்கை நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 23.9 விழுக்காடு குறைவு என்று சொத்துச் சந்தை நிறுவனம் 'எஸ்ஆர்எக்ஸ்' நேற்று தெரிவித்தது. இது அதற்கும் முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவு என்றும் நிறுவனம் குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20.1 விழுக்காடு சரிவு இருந்தது. கடன் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியது உட்பட சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் பல சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக் கைகள் நடப்புக்கு வந்தன.
அதிலிருந்து தொடர்ந்து ஐந் தாவது மாதமாக டிசம்பர் மாதத்திலும் குறைவாகவே மறுவிற் பனை வீடுகள் விலை போயின. பொதுவாகவே டிசம்பர் மாதத் தில் பலர் வெளிநாடு சென்று விடுவதால் வீடு வாங்கும் விற்கும் பரிவர்த்தனைகள் குறைவாகவே இருக்கும். இதற்கிடையே சென்ற ஆண் டின் டிசம்பர் மாதம் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் எண் ணிக்கை 1,434ஆக இருந்தது. அதற்கும் முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்த எண் ணிக்கை 1,587 என இருந்தது. சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, பழைய வீட்டு விலைகளின் மதிப்பு குறைவதால் மக்களிடையே கவலையும் நிலவி வருகிறது. இவற்றால் கைமாறும் மறுவிற் பனை வீடுகளின் எண்ணிக்கை மாதாமாதம் குறைந்துகொண்டே வரலாம் எனக் கூறப்படுகிறது.

