சிங்கப்பூர் ஆற்றோரம் மேலும் நான்கு சிலைகள்

சங் நீல உத்தமா, டான் டோக் செங், முன்‌ஷி அப்துல்லா, நாராயண பிள்ளை = சிங்கப்பூர் வரலாற்றில் நிலைத்திருக்கும் இந்த நால் வரும் நேற்று முதல் நகரின் மத்தியில் ராஃபிள்ஸுடன் சிலை வடிவில் காட்சி யளிக்கின்றனர்.

இவர்களில் நீல உத்தமா தவிர இதர மூவரும் 1819ல் சிங்கப்பூர் தீவில் முதன்முத லாகக் குடியேறியவர்கள். இத்தீவில் உள்ள முக்கிய சமூகங்களின் முன்னோடித் தலை வர்களாக அவர்கள் சிறந்து விளங்கினர். சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழர் திரு நாராயண பிள்ளை. பினாங்கிலிருந்து சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸுடன் அவர் சிங்கப்பூருக்கு வந்தார். பின்னர் இந்திய சமூகத்தின் தலைவராக அவர் திகழ்ந்தார். திரு டான் கொடையாளராக விளங்கிய தோடு தமது பெயரில் மருத்துவமனையைத் தொடங்க பங்களிப்பு செய்தார்.

திரு முன்‌ஷி, ராஃபிள்ஸின் செயலாளரா கவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். பெலம்பாங் இளவரசராக இருந்த சங் நிலா உத்தமா முதன்முதலாக சிங்கத்தை இத்தீவுப் பகுதியில் கண்டார். அதனைத் தொடர்ந்து 1299ஆம் ஆண்டில் சிங்கப்பூரா ஆட்சிப் பகுதியை அவர் தோற்றுவித்தார். சிங்கப்பூர் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட செயல்முறைத் திட்டத்திற்காக இந்நால்வருக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்ஃபர்ட் சிலைக்கு அருகே இந்த நான்கு சிலைகளும் காணப்படுகின்றன.

முன்னதாக, புதிய சிலைகளோடு ஒத்தி ருக்கும் வகையில் ராஃபிள்ஸ் சிலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பு ஒன்றை சிங்கப்பூர் பயணத் துறை கழகம் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டது. 1969ஆம் ஆண்டு முதல் தனியாகத் தோற்றமளித்து வரும் ராஃபிள்ஸ் சிலைக்கு துணையாக இப்போது நான்கு சிலைகள் வந்துள்ளன.

ஆற்றோரத்தில் தற்போதுள்ள சிலைகள் (இடமிருந்து) டான் டோக் செங், முன்‌ஷி அப்துல்லா, சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ், நாராயண பிள்ளை, சங் நீல உத்தமா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!