ஐபி டிப்ளோமா: சிறப்பாகச் செயல்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள்

ஐபி டிப்ளோமா: சிறப்பாகச் செயல்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள்

1 mins read

சிங்கப்பூரில் அனைத்துலக பாக்க லரேட் பட்டயச் சான்றிதழுக்கான தேர்வை எழுதிய மாணவர்கள் உலகளாவிய சராசரியைவிட சிறப்பாகச் செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. சிங்கப்பூரில் மட்டும் 2,152 மாணவர்கள் தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்களில் 97.99 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உலகளாவிய சராசரி 68.73 விழுக்காடு ஆகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடு கையில் சிங்கப்பூர் மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் அதிகமாக இருப்பதாக தேர்வை நடத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத் துலக பாக்கலரேட் அமைப்பு தெரிவித்தது. உலகளாவிய சராசரி 28.58 புள்ளிகள். சிங்கப்பூர் மாணவர்கள் சராசரியாக 38.49 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஆங்கிலோ சீனப் பள்ளி (சுயேச்சை), கலைப் பள்ளி, செயிண்ட் ஜோசப்ஸ் கல்விக் கழகம், ஹுவா சோங் அனைத்துலகப் பள்ளி உட்பட எட்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை நேற்று பெற்றனர். இந்தப் பள்ளிகளைத் தவிர்த்து மேலும் 17 பள்ளிகள் அனைத்துலக பாக்கலரேட் பட்டயச் சான்றிதழ் பாடத்திட்டத்தை அமல்படுத்து கின்றன. அப்பள்ளிகளின் மாண வர்கள் கடந்த மே மாதத்தில் தேர்வு எழுதினர்.