சேவையை நிறுத்திய ரெட் டாட் பவர் மின்சார வர்த்தக நிறுவனம்

சேவையை நிறுத்திய ரெட் டாட் பவர் மின்சார வர்த்தக நிறுவனம்

1 mins read

பொது மின்சாரச் சந்தையிலிருந்து ரெட் டாட் பவர் மின்சார வர்த்தக நிறுவனம் வெளியேறி உள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டிய ரெட் டாட் நிறுவனம் பொது மின்சாரச் சந்தையிலிருந்து வெளியேறும் முதல் நிறுவனமாகும். இது ரெட் டாட் பவர் நிறுவனத்துடன் நின்றுவிடாது என்றும் வாடிக்கையாளர்களுக்காகப் போட்டி போட்டு வரும் மேலும் பல நிறுவனங்களும் அவற்றின் மின்சாரச் சேவையை நிறுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரெட் டாட் பவர் வெளியேறியதை அடுத்து, சிங்கப்பூரில் தற்போது 22 மின்சார வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 13 நிறுவனங்கள் பொது மின்சாரச் சந்தைத் திட்டத்தில் தொடர்ந்து பங்கெடுக்கின்றன. ரெட் டாட் பவர் நிறுவனம் அதன் சேவைகளை நிறுத்திக்கொண்டதால் ஜூரோங் வட்டாரத்தில் வசிக்கும் 120 குடும்பங்கள் உட்பட ஏறத்தாழ 3,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மின்சாரச் சந்தைத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இத்திட்டம் ஒவ்வொரு வட்டாரமாக அமல்படுத்தப்படுகிறது.