பெரனாக்கான் சங்கத்தின் முன்னாள் தலைவர் லீ கிப் லீ காலமானார்

பெரனாக்கான் சங்கத்தின் முன்னாள் தலைவர் லீ கிப் லீ காலமானார்

1 mins read
Google News Preferred Icon

பெரனாக்கான் சங்கத்தின் முன்னாள் தலைவர் லீ கிப் லீ காலமானார் சிங்கப்பூர் பெரனாக்கான் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பிரபல உள்ளூர் பாடகர், பாடலாசிரியர் டிக் லீயின் தந்தையுமான திரு லீ கிப் லீ டிசம்பர் 29ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 96. அவரது உடல் கடந்த புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவருக்குச் சிறுநீரகப் புற்றுநோய் இருந்ததாகக் கடந்த ஆண்டு தெரிய வந்தது. திரு லீக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். அவரது மகள் பெட்ரிஷயா 1980களில் நிகழ்ந்த கார் விபத்தில் மாண்டார். சிங்கப்பூர் பெரனாக்கான் சங்கத்தின் தலைவராக திரு லீ 1996லிருந்து 2010 வரை பதவி வகித்தார். அவரது தலைமையின் கீழ் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்தது.